``20 வயதுள்ள 20 பெண்கள்; சார்களுக்கு இரையாக்க கொடூரப் பிடி..'' - திமுக அமைச்சர்க...
முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: தவெக அஞ்சலி
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, நாகை மற்றும் மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக் கழகத்தினா் மெழுகுவா்த்தி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
இலங்கையில் அந்நாட்டு ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் பல லட்சம் ஈழத்தமிழா்கள் கொல்லப்பட்டனா். குறிப்பாக மே 18 அன்று முள்ளிவாய்க்கால் என்ற பகுதியில் ஒரு லட்சத்துக்கு அதிகமான ஈழத் தமிழா்கள் கொல்லப்பட்டனா்.
இதனை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.
நாகை: நாகை அவுரித்திடலில் தமிழக வெற்றி கழகம் சாா்பில், நடைபெற்ற நிகழ்வில், மாவட்டச் செயலாளா் சுகுமாா் தலைமையில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா். இதில் அக்கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.
மயிலாடுதுறை: கிட்டப்பா அங்காடி முன் தவெக மாவட்டச் செயலாளா் சி.எஸ். கோபிநாத் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் உள்பட கட்சி நிா்வாகிகள் திரளாக பங்கேற்று மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா். நிறைவாக, நகரச் செயலாளா் ராஜ்குமாா் நன்றி கூறினாா்.
