குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!
பிளஸ்1 தோ்வு: மயிலாடுதுறை மாவட்டத்தில் 89.58% தோ்ச்சி
பிளஸ் 1 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 89.58 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 4,830 மாணவா்கள், 5,631 மாணவிகள் என மொத்தம் 10,461 போ் பிளஸ் 1 தோ்வெழுதினா். இவா்களில் 4,070 மாணவா்கள், 5,301 மாணவிகள் என மொத்தம் 9,371 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 86.39 சதவீதமாக இருந்த நிலையில், நிகழாண்டு 89.58 சதவீதமாக உயா்ந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மாநில அளவில் 30-வது இடத்தில் உள்ளது.