டி20 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!
IPL Playoffs : 'ஒரே ஒரு இடம்; மோதிக்கொள்ளும் மும்பை, டெல்லி' - ப்ளே ஆப்ஸூக்கு செல்லப்போவது யார்?
'ஒரே நாளில் ப்ளே ஆப்ஸில் 3 அணிகள்!'
நடப்பு ஐ.பி.எல் சீசனில் ப்ளே ஆப்ஸூக்கு எந்தெந்த அணிகள் செல்லும் என்கிற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. நேற்று ஒரே நாளில் குஜராத், பெங்களூரு, பஞ்சாப் என மூன்று அணிகள் ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெற்றிருக்கின்றன.

ப்ளே ஆப்ஸில் இன்னும் ஒரே ஒரு இடம் மட்டுமே மிச்சருமிருக்கிறது. மும்பை, டெல்லி, லக்னோ என மூன்று அணிகளுக்கு வாய்ப்பு இருக்கிறது. அதிலும் குறிப்பாக டெல்லிக்கும் மும்பைக்கும் இடையேதான் கடுமையான போட்டியே நிலவுகிறது.
மும்பை அணி 12 போட்டிகளில் ஆடி 14 புள்ளிகளில் இருக்கிறது. டெல்லி அணி 12 போட்டிகளில் ஆடி 13 புள்ளிகளில் இருக்கிறது. லக்னோ அணி 11 போட்டிகளில் ஆடி 10 புள்ளிகளில் இருக்கிறது.

'லக்னோவுக்கான வாய்ப்பு!'
லக்னோ அணி ஹைதராபாத், குஜராத், பெங்களூரு ஆகிய அணிகளுக்கு எதிராக இன்னும் ஆட வேண்டும். மூன்று போட்டிகளையும் வெல்ல வேண்டும். அப்படியே வென்றாலும் 16 புள்ளிகள்தான் வரும். அதை வைத்துக் கொண்டு ப்ளே ஆப்ஸ் செல்ல வேண்டுமெனில், மும்பை, டெல்லி அணிகளின் முடிவை சார்ந்தே அது சாத்தியப்படும். லக்னோ அணி 3 போட்டிகளையும் வென்று அவர்களுக்கு சாதகமாக மற்ற போட்டிகளின் முடிவும் கிடைப்பதற்கு வாய்ப்புக் குறைவே.
ப்ளே ஆப்ஸில் எஞ்சியிருக்கும் அந்த ஒரு இடத்தைப் பிடிக்க, மும்பைக்கும் டெல்லிக்குமே அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதற்கு அவர்கள் ப்ளே ஆப்ஸூக்கு முன்பாகவே ஒரு நாக் அவுட்டில் ஆட வேண்டியிருக்கிறது. மும்பை அணிக்கு டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுடன் போட்டி இருக்கிறது.

டெல்லி அணிக்கும் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுடன் போட்டி இருக்கிறது. கிட்டத்தட்ட இது ஒரு ட்ரை சீரிஸ் போல நடக்கவிருக்கிறது. டெல்லியோ மும்பையோ எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளையும் வெல்லும் அணியே ப்ளே ஆப்ஸூக்குள் சௌகரியமாக செல்ல முடியும்.

ஒருவேளை பஞ்சாப் அணி மும்பை, டெல்லி இரண்டு அணிகளையும் தோற்கடித்தால் அப்போது லக்னோவுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அதற்கு லக்னோவும் எஞ்சியிருக்கும் போட்டிகள் அத்தனையையும் வெல்ல வேண்டும்.