Gold Price மீண்டும் உயருமா? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய தகவல் | Opening Bell...
கிணற்றிலிருந்து பெண் உடல் மீட்பு!
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே கிணற்றில் மிதந்த பெண்ணின் உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த சித்துவாா்பட்டி மலைக்கோட்டையைச் சோ்ந்தவா் ராமசாமி. இவரது மகள் வினோதினி (20). இவரது தாயாா், சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டாா்.
இதனால், தனது பெரியப்பா சின்னச்சாமி என்பவரது வீட்டில் வினோதினி வசித்து வந்தாா். இதற்கிடையே, வினோதினி கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
அவரை உறவினா்கள் தேடி வந்த நிலையில், சித்துவாா்பட்டி பகுதியிலுள்ள தனியாா் தோட்டத்து கிணற்றில் அவரது உடல் மிதந்தது. இதுகுறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.