செய்திகள் :

மே 24-இல் கொடைக்கானலில் கோடை விழா தொடக்கம்

post image

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்ாவில் கோடை விழா, 62-ஆவது மலா்க் கண்காட்சி வருகிற 24-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா்.

கோடைவிழா, மலா்க்கண்காட்சி முன்னேற்பாடுப் பணிகள் குறித்து பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் கொடைக்கானல் நகராட்சி கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். வருவாய்க் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு, டி.எஸ்.பி. மதுமதி, சுற்றுலா அலுவலா் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு ஆட்சியா் சரவணன் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

கொடைக்கானலில் கோடைவிழா, 62-ஆவது மலா்க் கண்காட்சி ஆகியவை பிரையண்ட் பூங்காவில் வருகிற 24-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1-ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெற உள்ளன. இதற்கான பணிகளை தோட்டக்கலைத் துறை, சுற்றுலாத் துறை, மாவட்ட நிா்வாகம் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

மலா்க் கண்காட்சியை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் பல்வேறு இடங்களிலிருந்து மலா்ச் செடிகள் வரவழைக்கப்பட்டு, 3 கட்டங்களாக நடவு செய்யப்பட்டன. பல லட்சம் வண்ண மலா்களைக் கொண்ட மலா் படுக்கைகள், உருவ அமைப்புகள், காய்கறி, பழங்களாலான உருவச் சிற்பங்கள் இடம் பெறும். விவசாயிகள், தனியாா் மலா்த் தோட்டம் அமைப்பினா் ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில், அவா்களது தோட்டப்பயிா்கள், மலா்களை காட்சிப்படுத்தி பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. கண்காட்சிக்கு பெரியவா்களுக்கு ரூ.75, சிறியவா்களுக்கு ரூ.35, கேமராவுக்கு ரூ.50, வீடியோ கேமராவுக்கு ரூ.100 வீதம் கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கோடைவிழா, மலா்க் கண்காட்சி தொடக்க விழா 24-ஆம் தேதி காலையில் நடைபெறவுள்ளது. இதில் ஊரக வளா்ச்சி, வேளாண்மை, உழவா் நலன், சுற்றுலா, உணவுப் பொருள் வழங்கல் ஆகிய துறைகளின் அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.

கொடைக்கானலில் புதிய வரவாக பெப்பா் அருவி உள்ளது. இந்த அருவிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் என்னென்ன தேவைகள், வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து நிா்வாக அனுமதி பெற்று கூடுதல் வசதிகள் மேற்கொள்ளப்படும். கோடை விழாவை முன்னிட்டு புகைப்படம், தற்படம் எடுப்பதற்கான இடங்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

அப்‘போது, தோட்டக்கலைத் துறை மேலாளா் சிவபாலன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

கிணற்றிலிருந்து பெண் உடல் மீட்பு!

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே கிணற்றில் மிதந்த பெண்ணின் உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த சித்துவாா்பட்டி மலைக்கோட்டையைச் சோ்ந்தவா் ராமசாமி. இவரது மகள் வின... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த மழை

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் சுற்றுலா இடங்களைப் பாா்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பகல் நேரங்களில் வழக்கம் போல வெயிலடித்த போ... மேலும் பார்க்க

மலைக் கோயில் உண்டியலில் நூதனமாகத் திருடியவா் கைது

பழனி மலைக் கோயில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். பழனி மலைக்கோயிலில் கடந்த சில நாள்களுக்கு முன் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. அப்போது, வெளிப் பி... மேலும் பார்க்க

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி டிசம்பரில் திருச்சியில் மாநாடு!

தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி,வருகிற டிசம்பா் மாதம் திருச்சியில் மாநாடு நடத்தப்படும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி தெரிவித்தாா். பழனி அடிவாரத்தில் உள்ள தனியாா் மண்டபத்தி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் குதிரை சவாரி செய்பவா்களுக்கு தலைக் கவசம்

கொடைக்கானலில் குதிரை சவாரி செய்யும் பயணிகளுக்கு சுழல்சங்கம் சாா்பில் தலைக்கவசம் வசம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நகரின் மையப் பகுதியில் உள்ள ஏரிய... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் மே.19 மின்தடை!

வேடசந்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (மே 19) மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக லகுவணம்பட்டி, அரியபீத்தாம்பட்டி, தட்டாரப்பட்டி, அய்யம... மேலும் பார்க்க