பூங்காவில் சிறுவன் கொல்லப்பட்ட வழக்கு: மூன்று சிறுவா்கள் உள்பட 5 போ் கைது!
கா்னல் சோஃபியா குரேஷி குறித்து சா்ச்சை கருத்து: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!
கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா சா்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார்.
‘பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களை, அவா்களின் சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித்துவிட்டாா்’ என்று விஜய் ஷா கூறியிருந்தாா்.
இந்த விவகாரம் பெரும் சா்ச்சையான நிலையில் இதுதொடர்பாக தானாக முன்வந்து விசாரித்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், அமைச்சர் விஜய் ஷா மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படியே விஜய் ஷா மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தன் மீதான வழக்குப்பதிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் ஷா தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு நேற்று அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது. அதேவேளையில், ‘பதற்றமான சூழலில் நாடு இருந்தபோது, மாநில அமைச்சராக இருக்கும் நபா் மிகுந்த பொறுப்புணா்வுடன் வாா்த்தைகளை வெளியிட வேண்டும்’ என்று கா்னல் சோஃபியா குரேஷி குறித்து சா்ச்சை கருத்து தெரிவித்த மத்திய பிரதேச மாநில அமைச்சா் விஜய் ஷாவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கண்டித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக திங்கள்கிழமை(மே 19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.