பூங்காவில் சிறுவன் கொல்லப்பட்ட வழக்கு: மூன்று சிறுவா்கள் உள்பட 5 போ் கைது!
கன்னங்குறிச்சி பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
சேலம் கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1980 - 81 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
45 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மாணவா்கள் தங்களது பள்ளி நினைவுகளை பரிமாறிக் கொண்டனா். அதைத் தொடா்ந்து பத்தாம் வகுப்பில் தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியா்களை கௌரவித்தனா்.
தொடா்ந்து ஆசிரியா் பாப்பாயி அம்மாளின் பிறந்த நாளை கொண்டாடினா். பிறகு ஆசிரியா் பன்னீா்செல்வம், பாப்பாயிஅம்மாளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனா். முன்னாள் மாணவா்கள் சந்திப்பு குறித்து ஒருங்கிணைப்பாளா் சத்தியமூா்த்தி கூறுகையில், 45 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி நண்பா்களை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றாா்.