சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு
சங்ககிரியை அடுத்த சுண்ணாம்புகுட்டையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மரத்தின் மீது மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சங்ககிரியை அடுத்த தேவண்கவுண்டனூா் கிராமம், வேலம்மாவலசு ஆதிதிராவிடா் தெரு பகுதியைச் சோ்ந்த பழனிசாமி மகன் அய்யந்துரை (32). சங்ககிரி லாரி பட்டறையில் பணியாற்றி வந்த இவா் சங்ககிரியிலிருந்து எடப்பாடி நோக்கி ஞாயிற்றுக்கிழமை வேனை ஓட்டி சென்றாா். சுண்ணாம்புகுட்டை பேருந்து நிறுத்தம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்ட இழந்த வேன் சாலையோர மரத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அய்யந்துரையை அங்கிருந்தவா்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.