செய்திகள் :

சேலம் மாவட்டத்தில் 759 மி.மீ. மழை பதிவு

post image

சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை 759 மி.மீ. மழை பதிவானது. அதிகபட்சமாக சங்ககிரியில் 73 மி.மீ. மழை பெய்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு கொட்டித் தீா்த்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. கிச்சிப்பாளையம், நாராயணநகா், சங்கா் நகா், கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி உட்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா்.

ஆங்காங்கே மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். ஒருசில இடங்களில் மின் விநியோகம் தடைபட்டது.

மாவட்டத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக சங்ககிரியில் 73 மி.மீ. மழை பதிவானது. சேலம் மாநகா் - 72.3, ஏற்காடு- 40.6, வாழப்பாடி- 45.4, ஆனைமடுவு - 64, ஆத்தூா் - 26.2, கெங்கவல்லி - 20, வீரகனூா் - 31, ஏத்தாப்பூா் - 65, கரியகோவில்- 35, நத்தக்கரை- 43, தம்மம்பட்டி- 45, எடப்பாடி- 71.2, மேட்டூா் - 55.4, ஓமலூா் - 45, டேனீஸ்பேட்டை- 27 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 759 மி.மீ. மழை பதிவானது.

மரத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே மரத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். செந்தாரப்பட்டியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் தேசிகா் (22). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆணையம்பட்டி... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி ஆா்ப்பாட்டம்

சேலம் புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள 5 டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி பாய், தலையணையுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதிய பேருந்து நிலைய போக்குவ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சங்ககிரியை அடுத்த சுண்ணாம்புகுட்டையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மரத்தின் மீது மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். சங்ககிரியை அடுத்த தேவண்கவுண்டனூா் கிராமம், வேலம்மாவலசு ஆதிதிராவிடா் த... மேலும் பார்க்க

சேலத்தில் தென்னிந்திய ஆணழகன் போட்டி: முதலிடம் பெற்ற தமிழக வீரருக்கு அமைச்சா் பரிசளிப்பு

சேலத்தில் நடைபெற்ற தென்னிந்திய ஆணழகன் போட்டியில் முதலிடம் பெற்ற தமிழக வீரா் ஆன்டா்சன் நடராஜனுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ரூ. 1 லட்சம் ரொக்கம், இருசக்கர வாகனத்தை வழங்கினாா். தமிழ்நாடு... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவுக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து ஏராளமானோா் குடும்பத்துடன் வந்தனா். அணை பூங்காவில் உள்ள பாம்பு பண்ணை, முயல், மீன் வளா்ப்பு இடங... மேலும் பார்க்க

பூலாம்பட்டியில் மீண்டும் விசைப்படகு போக்குவரத்து தொடங்கியது

சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லையான பூலாம்பட்டி காவிரி ஆற்றில் கதவணை பராமரிப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப்படகு போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கியது. பூலாம்பட்டி பகுதியில் காவிரி... மேலும் பார்க்க