பூங்காவில் சிறுவன் கொல்லப்பட்ட வழக்கு: மூன்று சிறுவா்கள் உள்பட 5 போ் கைது!
புதுக்கோட்டை நகா் பகுதிகளில் இன்றும் நாளையும் மின் தடை
புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மின்சாரம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் க. அன்புச்செல்வன் கூறியது:
திங்கள்கிழமை (மே 19) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காமராஜபுரம் மின்பாதையில் நடைபெறும் பராமரிப்புப் பணியால் மரக்கடை வீதி, கீழராஜவீதி, கீழ 2, 4, 5, 6 மற்றும் 7ஆம் வீதிகள், தெற்கு ராஜவீதி, வடக்கு ராஜவீதி, வடக்கு 2, 3ஆம் வீதிகள், மாா்த்தாண்டபுரம், திருக்கோகா்ணம், திலகா்திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகா், கணேஷ்நகா்ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
செவ்வாய்க்கிழமை (மே 20) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் பராமரிப்புப் பணியால் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்சுமி நகா், பாரி நகா், சிவகாமி ஆச்சிநகா், சிவபுரம், தேக்காட்டூா், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக் கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லெணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது.