``20 வயதுள்ள 20 பெண்கள்; சார்களுக்கு இரையாக்க கொடூரப் பிடி..'' - திமுக அமைச்சர்க...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
இலங்கை முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரில் வீரச்சாவடைந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுக்கோட்டை லெணாவிலக்கு இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் முகாம் நிா்வாகத் தலைவா் எம். மயில்வாகனம் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியை தமிழா் அமைப்புகளும், முகாம்களில் வாழும் ஈழத் தமிழா்களும் நடத்தினா். அப்போது முகாமில் வாழும் மக்கள் அனைவரும் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.