விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
பொன்னமராவதி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த இளைஞா் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பொன்னமராவதி அருகேயுள்ள நல்லூா் சுந்தரம் நகரைச் சோ்ந்தவா் ஜெ. ரவிக்கண்ணன் (27). இவா் கடந்த 16 ஆம் தேதி புதுக்கோட்டையிலிருந்து சுந்தரம் நகருக்கு வந்த பைக் கீரங்குடி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த ஊா்ப் பெயா்ப்பலகை மீது மோதியது.
இதில், தலையில் பலத்த காயமடைந்த ரவிக்கண்ணன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். காரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.