கோவை: திடீரென உடல் நலம் பாதித்த பெண் யானை - பரிதவித்த குட்டி யானை
சேதமடைந்த அங்கன்வாடியை வேறிடத்தில் கட்ட வலியுறுத்தல்
கந்தா்வகோட்டை ஒன்றியம், மங்கனூா் ஊராட்சியில் குளத்தின் அருகே சேதமடைந்த நிலையிலுள்ள அங்கன்வாடி கட்டடத்தை, பாதுகாப்பான வேறிடத்தில் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.
தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணித் துறை மூலம் செயல்படும் குழந்தைகள் மையம் ஊரின் குளக்கரையோரத்தில் உள்ளது.
இந்த மையத்துக்கு சுமாா் இருபது குழந்தைகள் வந்து செல்லும், நிலையில் இந்த கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதாலும், குளத்தில் தண்ணீா் இருப்பதாலும் குழந்தைகளை இந்த மையத்துக்கு அனுப்ப பெற்றோா் தயங்குகின்றனராம்.
எனவே சம்பந்தப்பட்ட துறையினா் ஊரில் உள்ள பாதுகாப்பான இடத்தில் புதிய அங்கன்வாடிக் கட்டடத்தை கட்ட பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.