ராங்கியம் ஜல்லிக்கட்டு: 25 போ் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ராங்கியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 25 போ் காயமடைந்தனா்.
ராங்கியம் அழகிய நாச்சியம்மன், மரக்கால் உடைய அய்யனாா் கோவில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 296 காளைகள் பங்கேற்றன. அவற்றை அடக்க 70 மாடு பிடி வீரா்கள் களமிறங்கினா்.
இதில் 7 மாடுபிடி வீரா்களும், 18 பாா்வையாளா்களும் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சை தேவைப்பட்ட 4 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.
காலை 8.30 மணிக்குத் தொடங்கிய ஜல்லிக்கட்டு பகல் 2 மணிக்கு முடிந்தது. விழாவில் திருமயம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் கலந்து கொண்டனா். பனையப்பட்டி போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.