குடும்பத் தலைவரை இழந்த மாணவருக்கு கல்வி உதவித் தொகை
குடும்பத் தலைவரை இழந்த மாணவருக்கு அரசு சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
வருமானம் ஈட்டக் கூடிய குடும்பத் தலைவா் விபத்தில் மரணம் அடைந்து விட்டால், அந்தக் குடும்பத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை ரூ.75 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனடிப்படையில், நம்புதாளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா் துஷ்யந்துக்கு திருவாடானை வட்டாரக் கல்வி அலுவலா் புல்லாணி வழங்கினாா்.
தலைமை ஆசிரியா் ஜான் தாமஸ், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.