செய்திகள் :

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் 3 பழங்குடியின எம்பி-க்கள் இடைநீக்கம்?

post image

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பழங்குடியின எம்பி-க்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட மவோரி பழங்குடியின மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவின் நகலை கிழித்து, இளம் மவோரி எம்பி ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி மைபி கிளார்க் (வயது 22), பாரம்பரிய ஹக்கா முழக்கத்தை எழுப்பி தனது எதிர்ப்பைக் காட்டினார்.

அப்போது, அவருடன் மற்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர். இந்தச் சம்பவம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட விடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி, பலரும் ஹனாவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நியூசிலாந்து அரசு அமைத்த ஆணையம் நாடாளுமன்றத்தில் ஹக்கா முழக்கம் எழுப்பிய மூன்று உறுப்பினர்களையும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளது.

அதில், தெ பாத்தி மவோரி எனும் மவோரி பழங்குடியின கட்சியின் துணைத் தலைவர்களான டெப்பி ஞாரெவா பாக்கெர் மற்றும் ராவிரி வைட்டிட்டி ஆகியோரை 21 நாள்களுக்கும் இளம் உறுப்பினர் ஹனாவை 7 நாள்களுக்கும் இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், நாடாளுமன்ற எம்பி ஹனா, சபை உறுப்பினரை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதால் அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அவர் தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்து நாடாளுமன்றத்துக்கு கடிதம் எழுதியதால் குறைந்தபட்ச தண்டனை மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஹக்கா மற்றும் மவோரி பாரம்பரிய நடனங்களில் உறுப்பினர்கள் ஈடுபடுவது புதியதல்ல என்றாலும் அதற்கு சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டிய விதிமுறையுள்ளது.

இந்தப் பரிந்துரைக் குறித்து மவோரி கட்சி கூறுகையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனைகளில் மிகவும் கடுமையானது என்றும் பழங்குடியின மக்கள் எதிர்த்தால், ஆதிக்க சக்திகள் அதிகப்படியான தண்டனையையே விதிப்பார்கள் என்றும் விமர்சித்துள்ளது. மேலும், இது நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய எச்சரிக்கை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த இடைநீக்கம் பரிந்துரைக் குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. ஆளும் பழமைவாத கூட்டணி அரசின் ஆதரவினால் இடைநீக்கம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கா? -டிரம்ப் அதிர்ச்சி தகவல்!

தோஹா: அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி தகவலொன்றை இன்று(மே 15) தெரிவித்திருக்கிறார். கத்தார் சென்றுள்ள டி... மேலும் பார்க்க

லஷ்கர்-இ-தய்பாவின் சேதமடைந்த வசிப்பிடங்களில் சீரமைப்பு பணிகள்: பாகிஸ்தான் அரசு திட்டம்

இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் இந்திய படைகள் மேற்கொண்ட அதி துல்லியமான தாக்குதலில் அங்குள்ள 9 பகுதிகளில் அமைக்கப்பட்டிருந... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் எப்போதும் துணை நிற்போம் - துருக்கி அதிபர்

இஸ்தான்புல்: பாகிஸ்தானுடன் இன்பத்திலும் துன்பத்திலும் துணை நிற்போம் என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்திருக்கிறார்.கடந்த சில நாள்களுக்கு முன்னர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற... மேலும் பார்க்க

தாய்லாந்தில் அரிய வகை குரங்கு குட்டிகளைக் கடத்திய நபர் கைது!

தாய்லாந்து நாட்டில் அரிய வகை குரங்கு குட்டிகளைக் கடத்திய நபரை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சர்வதேச வனவிலங்கு கடத்தல் குழு தொடர்பான வழக்கில், அமெரிக்க மீன் வளம் மற்றும் வனவிலங்கு துறை அ... மேலும் பார்க்க

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் இந்தியர்!

விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல்முறையாக இந்தியர் ஒருவர் செல்கிறார்.அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்ஸியோம் ஸ்பேஸ் என்ற நிறுவனம் மேற்கொள்ளும் இந்த முயற்சியில் இந்திய விண்வெளி ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அடையாளம் தெரியாத மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் அவந... மேலும் பார்க்க