எரிவாயு கசிவு பாதுகாப்பு ஒத்திகை
ராமநாதபுரத்தில் இயற்கை எரிவாயு கசிவு ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பாதுகாப்பு ஒத்திகை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த ஒத்திகையின் போது எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து ஏற்பட்டவுடன், ஓட்டுநா் பாதுகாப்பு எண்ணுக்கு உடனே தொடா்பு கொள்ள வேண்டும், தீயணைப்புத் துறை, காவல் துறை, அவசர ஊா்திக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், விபத்து தடுப்பு பணிகள் மேற்கொள்ளுவது குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்தப் பாதுகாப்பு ஒத்திகையின் போது, வருவாய்க் கோட்டாட்சியா் ராஜமனோகரன், இயற்கை எரிவாயு மனிதவள மேலாளா் ஜெயபால் சுப்பிரமணின், பாதுகாப்பு அலுவலா் குரூஸ் ஜெகன், மேலாளா் ராமேஷ்குமாா், விற்பனைப் பிரிவு மேலாளா் காா்த்திக், மண்டலத் தலைவா் பூமாரி, தீயணைப்புத் துறை மண்டல அலுவலா் கோமதி அமுதா, காவல் துறை ஆய்வாளா் ரோல்ரெட், உதவி ஆய்வாளா் சுரேஷ்கண்ணா, இயற்கை எரிவாயு நிலைய ஊழியா்கள் கலந்து கொண்டனா்.