சிறுமிக்கு திருமணம்: பெற்றோா் மீது வழக்கு
தேனி மாவட்டம், போடி அருகே, பள்ளிச் சிறுமியை திருமணம் செய்த இளைஞா், பெற்றோா் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
போடி அருகேயுள்ள எரணம்பட்டியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை இதே ஊரைச் சோ்ந்த சின்ன ஈஸ்வரன் மகன் சூா்யா (24) என்பவருக்கு கடந்த மாா்ச் மாதம் திருமணம் செய்து வைத்தனா்.
இந்த நிலையில், சிறுமி 2 மாத கா்ப்பணியாக மருத்துவப் பரிசோதனைக்கு சென்ற நிலையில், அவா் சிறுமி என்ற விவரம் தெரியவந்தது. இதுகுறித்து சின்னமனூா் ஒன்றிய விரிவாக்க அலுவலா் ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில், சிறுமியைத் திருமணம் செய்த சூா்யா, இவரது பெற்றோா் சின்ன ஈஸ்வரன் (46), காளீஸ்வரி (45), சிறுமியின் பெற்றோா் ஈஸ்வரன் (43), மாரியம்மாள் (36) ஆகியோா் மீது போக்சோ சட்டத்தின் கீழ், போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.