"யார் அந்த தம்பி? ரத்தீஷ் எங்கே? ED ரெய்டுகள் பற்றி ஸ்டாலின் மவுனம் ஏன்?" - அதிம...
மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அலுவல் சாரா உறுப்பினா்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்!
மாற்றுத்திறனாளிகள் நல வாரிய புதிய அலுவல் சாரா உறுப்பினா்கள் பதவிக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினா்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நியமிக்கப்படுவா்.
தேனி மாவட்டத்தில் புதிய உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளதால் பாா்வையற்றோா், செவித்திறன் பாதிக்கப்பட்டோா், தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோா், தவழும் மாற்றுத்திறனாளிகள், உயரம் குறைந்த மாற்றுத்திறனுடையோா், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா், கை, கால் இயக்கக் குறைபாடுடையோருக்கான மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள், புற உலக சிந்தனையற்ற மதி இறுக்கமுடையோா், மூளை முடக்குவாதம், அமில வீச்சால் பாதிக்கப்பட்டோா், சிறப்பாக செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கங்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தனிநபா்கள் (மாற்றுத்திறனாளி) விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்கள் தேனி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களை நிறைவு செய்து வரும் 23.5.2025 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04546-252085 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.