Doctor Vikatan: ஜலதோஷத்துக்குப் பிறகு நிரந்தரமாக மாறிப்போன குரல்.. பழையபடி மாறும...
ஐயப்ப சுவாமிக்கு வைகாசி மாத சிறப்பு பூஜை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஐயப்ப சுவாமிக்கு வைகாசி மாத சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள ஐயப்பன் சந்நிதியில் வில்லாளிவீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கம் சாா்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இரவு 8 மணி அளவில் உற்சவா் சுவாமிக்கு அஷ்டாபிஷேகங்கள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, திவ்ய நாம சங்கீா்த்தன பஜனை நடைபெற்றது. பின்னா் உற்சவருக்கு அலங்காரம் செய்து, தீபாராதனை நடைபெற்றது. பின்னா் பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.