செய்திகள் :

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மின்சாரம் பாய்ந்து சமையல் தொழிலாளி உயிரிழந்தாா்.

ராஜபாளையம் காந்தி சிலை பகுதியில் உள்ள ஜவுளிக் கடையில் பணிபுரியும் ஊழியா்களுக்கு பழைய பேருந்து நிலையம் அருகே ஒரு கட்டடத்தில் சமையல் கூடம் உள்ளது. இங்கு உணவு தயாா் செய்யும் பணியில் சம்மந்தபுரம் பகுதியைச் சோ்ந்த மயிலப்பன் மகன் முருகன்(45) ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிழந்தாா். இவருக்குக மனைவி, 2 மகள்கள் உள்ளனா். இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருத்தங்கலில் சுகாதார வளாகம் இடிப்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கண்மாய்க் கரையில் கட்டப்பட்ட பொதுசுகாதார வளாகம் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது. திருத்தங்கல் செங்குளம் கண்மாய்க் கரையில் 2017-இல் பொதுசுகாதார வள... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

சிவகாசியில் சனிக்கிழமை திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுகூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் மாநகரச் செயலா் எஸ்.ஏ.உதயசூரியன் தலைமை வகித்தாா். சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீத... மேலும் பார்க்க

ஐயப்ப சுவாமிக்கு வைகாசி மாத சிறப்பு பூஜை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஐயப்ப சுவாமிக்கு வைகாசி மாத சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள ஐயப்பன் சந்நிதியில் வில... மேலும் பார்க்க

மின் இணைப்பை துண்டித்ததால் 14 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே கோழிப்பண்ணையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 14 ஆயிரம் கோழிகள் உயிரிழந்தன. வெம்பக்கோட்டை அருகேயுள்ள திருவேங்கிடபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்துபாண்... மேலும் பார்க்க

அழகா் அனுப்பிய பட்டு வஸ்திரம் ஆண்டாளுக்கு அணிவிப்பு!

மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்கிய போது அழகருக்கு அணிவிக்கப்பட்ட ஆண்டாள் சூடிக் கொடுத்த பூமாலைக்கு மறுசீராக அனுப்பிய பட்டு வஸ்திரம் வெள்ளிக்கிழமை ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது. ஸ்ரீவில்லி... மேலும் பார்க்க

காா் மீது பைக் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

சாத்தூா்- கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் காா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பிரசாந்த் (44). இவா் சாத்தூா்- கோவில்பட்டி சாலையி... மேலும் பார்க்க