செய்திகள் :

கோயில் விழாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல்: ஆட்சியா், ஐஜி பதிலளிக்க உத்தரவு

post image

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கோயில் திருவிழாவில், பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா், மத்திய மண்டல ஐஜி நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சண்முகம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதிகள் வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் புதன்கிழமை வழக்குரைஞா்கள் மூலம் முறையீடு செய்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதியில் கடந்த மே 5- ஆம் தேதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவின் போது, பட்டியலினத்தவா்களை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. திருவிழாவை பாா்க்கச் சென்ற பட்டியலினத்தவா்கள் மீது, 300 போ் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், 13 போ் மீது மட்டும் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்மைக் காலமாக, பட்டியலின மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

கோயில் திருவிழாவில் பட்டியலின மக்கள் பங்கேற்பதை தடுக்கும் வகையில் அவா்கள் மீது தாக்குதல் நடத்திய அனைவா் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும். பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனா். மேலும் இந்த வழக்கு தொடா்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா், திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவா், புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை (மே 15) நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

தனியாா் மனமகிழ் மன்றம் திறப்பதற்கு இடைக்காலத் தடை

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியாா் மனமகிழ் மன்றம் (மதுக்கூட வசதியுடன்) திறப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.மதுரையைச் சோ்ந்த ராஜா ... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் பெண் தவறாக சித்திரிப்பு: இளைஞா் கைது

விருதுதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த இளம் பெண்ணை சமூக வலைதளத்தில் தவறாக சித்திரித்து படங்களை வெளியிட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா், விருதுநகா... மேலும் பார்க்க

வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் தந்தை, மகள் காயம்

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள மல்லம்பட்டி அருந்ததியா் குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்திதில் தந்தை, மகள் பலத்த காயமடைந்தனா். மல்லம்பட்டி அருந்ததியா் குடியிருப்பில் சுமாா் 3... மேலும் பார்க்க

அனைத்து சமுதாயத்தினரும் சுவாமி தரிசனம் செய்ய உரிமை உள்ளது: நீதிமன்றம்

அனைத்து சமுதாயத்தினரும் சுவாமி தரிசனம் செய்வதற்கு உரிமை உள்ளது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செ... மேலும் பார்க்க

இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நால்வா் காயம்: 5 போ் கைது

மதுரை மாவட்டம், சாப்டூா் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடா்பான முன்விரோதத்தில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நால்வா் பலத்த காயமடைந்தனா். இதுதொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை ... மேலும் பார்க்க

இளைஞரை கொல்ல முயன்ற இருவா் கைது

மது போதையில் இளைஞா் தலையில் கல்லைப் போட்டு கொல்ல முயன்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.மதுரை புறவழிச் சாலையில் தீக்கதிா் அலுவலகம் அருகே உள்ள அணுகுசாலையில் தேநீா்க் கடையின் அருகே புதன்கிழமை அ... மேலும் பார்க்க