செய்திகள் :

``விக்ரமின் காசி திரைப்படத்தில் வில்லன்; மலையாள சீரியலில் ஹீரோ" - நடிகர் விஷ்ணு பிரசாந்த் மரணம்

post image

நடிகர் விக்ரமின் நடிப்பில் வெளியான படம் காசி (2001). அந்தப் படத்தில் வில்லக் கதாப்பத்திரத்தில் நடித்திருப்பார் விஷ்ணு பிரசாத். இதுதான் அவரின் முதல் படம். ஆனால், பார்க்கும் எல்லோருக்கும் அவர் மீது வெறுப்பு வரும் அளவு நடிப்பில் பின்னியிருப்பார்.

நடிகர் விஷ்ணு பிரசாந்த்
நடிகர் விஷ்ணு பிரசாந்த்

அதைத் தொடர்ந்து, 'கையெதும் தூரத்தில்', 'ரன்வே', 'மாம்பழக்காலம்', 'லையன்', 'பென் ஜான்சன்', 'லோகநாதன் IAS', 'பாதாகா' போன்ற மலையாள திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களில் 'ஸ்த்ரீபதம்', 'ராக்குயில்', 'சுயம்வரம்' போன்றவற்றில் வில்லன் வேடங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இந்த நிலையில், கல்லீரல் நோயால் அவதிப்பட்டுவந்த விஷ்ணு பிரசாந்த், அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காகத் திட்டமிடப்பட்டது. அவரது மகளே கல்லீரல் தானம் செய்ய முன்வந்தாலும், சிகிச்சைக்காக ரூ.30 லட்சம் தேவைப்பட்டது. எனவே, விஷ்ணு பிரசாந்தின் குடும்பம் நிதி திரட்ட முயற்சி செய்தது.

நடிகர் விஷ்ணு பிரசாந்த்
நடிகர் விஷ்ணு பிரசாந்த்

இதற்கிடையில், அவரது உடல்நிலை மோசமானதால், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில்தான் நேற்று (மே1) காலமானார். அவருக்கு இப்போது வயது 49. அவரது மரண செய்தி, மலையாள சினிமா மற்றும் தொலைக்காட்சி உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

`குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்க ஏன் சம்மதிச்சேன்னா?' - லட்சுமி ராமகிருஷ்ணன் ஓப்பன் ராக்

விஜய் டிவியில் வரும் ஞாயிறு முதல் தொடங்கவிருக்கிறது குக்கு வித் கோமாளி சீசன் 6.இந்த முறை தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜுடன் செஃப் கௌசிக்கும் சேர்ந்துள்ளார்.வழக்கமான காம்போ போரடித்து விட்டதாக கருதினார... மேலும் பார்க்க

மிஸ் பண்ணிய தலைவர், டிக் செய்த ஜெயலலிதா 'நேருக்கு நேர்' ரபி பெர்னார்டு |இப்ப என்ன பண்றாங்க? பகுதி 7

ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து, ரசிகர்களால் தீவிரமாக கவனிக்கப்பட்டவங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா சூழ்நிலையா தெரியாது. இப்போது மேக் அப், ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார... மேலும் பார்க்க

Irfan: ``மன்னுச்சுகோங்க! நான் அப்படிப்பட்டவன் இல்ல; நடந்தது இதுதான்'' - யூடியூப்பர் இர்பான் விளக்கம்

பிரபல யூடியூப்பரான இர்பான் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கார் விபத்து, குழந்தை பிறக்கும் முன்பே பாலினத்தை பொதுவெளியில் சொன்னது, பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ-... மேலும் பார்க்க

நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்டு? ஒரு வருடத்துக்கு டிவியில் வர முடியாது; காரணம் என்ன?

'சிந்து பைரவி' சீரியல் பிரச்னை தொடர்பாக நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்டு தரப்பட்டுள்ளது.அடுத்த ஒரு வருடத்துக்கு அவர் எந்தவொரு டிவியிலும் சீரியலிலோ அல்லது ரியாலிட்டி ஷோவிலோதலைகாட்ட முடியாது என்கிறார்கள்.ச... மேலும் பார்க்க

`அன்னைக்கு சினிமா நடிகர்களுக்கு நிகரான புகழ்..!’ - 'தூர்தர்ஷன்' நிஜந்தன்

பொழுதுபோக்கு, செய்தி, விளையாட்டு என இன்று ஒவ்வொரு ஏரியாவுக்கும் தனித்தனியாக நூற்றுக்கணக்கான சேனல்கள் வந்து விட்டன. ஆனால் தனியார் சேட்டிலைட்சேனல்கள் வருவதற்கு முன்? 'ஒன் மேன் ஆர்மி'யாககோலோச்சிக் கொண்டி... மேலும் பார்க்க