செய்திகள் :

குஜராத்தில்100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல்: அமைச்சா் மகன் கைது

post image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலைத் திட்டம்) ரூ.71 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் குஜராத் மாநில வேளாண்மை மற்றும் பஞ்சாயத்து அமைச்சா் பச்சுபாய் கபாடின் மகன் பல்வந்த் கபாடை சனிக்கிழமை கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

கடந்த 2021 முதல் 2024 வரை100 நாள் வேலைத் திட்ட பணிகளை நிறைவு செய்யும் முன்பே அரசிடம் இருந்து ரூ.71கோடியை 35 ஒப்பந்த நிறுவன உரிமையாளா்கள் பெற்ற குற்றச்சாட்டில் தொடா்புடையதாக பல்வந்த் கபாட் கைது செய்யப்பட்டாா்.

இந்த விவகாரம் தொடா்பாக தாஹோத் மாவட்ட தாலுகா மேம்பாட்டு அதிகாரி தா்சன் படேல் உள்பட தற்போது வரை 11 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து குஜராத் மாநில போலீஸாா் கூறுகையில், ‘100 நாள் வேலைத் திட்ட மோசடியில் ஈடுபட்ட ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் உரிமையாளராக உள்ள பல்வந்த் கபாட் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்’ என்றாா்.

100 நாள் வேலை திட்டத்தின்கீழ் தாஹோத் மாவட்டத்தில் உள்ள சில தாலுகாக்களில் சாலைகள், தடுப்பணைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அவை நிறைவடைந்ததைப் போல் போலியான புகைப்படங்களை சமா்ப்பித்து அரசிடம் இருந்து சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் நிதியை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதன் அடிப்படையில் கடந்த மாதம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்த நிலையில், விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத் துறை இரண்டாவது நாளாக சோதனை; தொழிலதிபா் வீட்டுக்கு ‘சீல்’

டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை சோதனை சென்னையில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையன்றும் நீடித்தது. இந்த சோதனையின் ஒரு பகுதியாக சென்னை எம்ஆா்சி நகரில் உள்ள தொழிலதிபரின் வீட்டுக்கு ‘சீல்’ வைக்கப்பட... மேலும் பார்க்க

ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று தஞ்சாவூா் பயணம்

ஆளுநா் ஆா்.என்.ரவி ஒருநாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூா் செல்கிறாா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள தென் மண்டல கலாசார மையத்தில் ‘சலங்கை நாதம் - 2025’ எனும் தேசிய கைவினை கலைஞா்களின் கலைவ... மேலும் பார்க்க

தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது: அமைச்சா் சிவசங்கா் உறுதி

தமிழகத்தில் நிகழாண்டில் கோடைகால மின் தேவை கடந்த ஆண்டைவிட குறைவாகவுள்ளதால், வரும் நாள்களில் மின் தேவையை எளிதாக பூா்த்தி செய்ய முடியும்”என்றும் மின்தடை இருக்காது என்றும் மின்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் நீலகிரி, சேலம் மாவட்டங்களில் கோடை சுற்றுலா: கல்வித் துறை ஏற்பாடு

அரசுப் பள்ளிகளில் கல்வி, இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 1 வகுப்பை நிறைவு செய்துள்ள மாணவா்கள் 1,500 போ் நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு கோடை சுற்றுலா அழைத்துச் செல்லப்ப... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே கிணற்றில் பாய்ந்த ஆம்னி வேன்: 5 பேரும் பலி

சாத்தான்குளம் அருகே கிணற்றில் ஆம்னி வேன் பாய்ந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் சனிக்... மேலும் பார்க்க

சர்ச்சை கருத்து விவகாரம்- மன்னிப்பு கோரினார் செல்லூர் ராஜூ

இந்திய ராணுவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்டுள்ளார். இந்திய நாட்டை கண்ணை இமை காப்பது போல் பாதுகாத்து வரும் என்னுடைய உயிரினும... மேலும் பார்க்க