பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம்! ஐநா கணிப்பு!
உலகளவில் பொருளாதாரம் நிலையற்ற தன்மையில் இருந்தபோதிலும், இந்தியா முன்னேறி வருவதாக ஐநா தெரிவிக்கிறது.
உலகளவில் அரசியல் நிச்சயமற்ற தன்மை, வர்த்தகப் பதற்றங்கள் அதிகரித்து வருவதால், உலகப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க ஆபத்தில் இருப்பதாக ஐநாவின் உலகப் பொருளாதாரத்தின் நிலைமை மற்றும் கண்ணோட்டத்தின் ஆய்வு கூறுகிறது. மேலும், பல நாடுகள் மெதுவாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, உலகளவில் பொருளாதாரம் நிலையற்ற தன்மையில் இருந்தபோதிலும், இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக ஐநா தெரிவிக்கிறது. மேலும், நடப்பு நிதியாண்டில் 6.3 சதவிகித வளர்ச்சி விகிதத்துடன், இந்தாண்டில் உலகின் மிக விரைவான வளர்ச்சியின் முக்கிய பொருளாதாரமாக இந்தியா தொடரும் என்றும் கூறியது.
அடுத்தாண்டில், இந்தியாவின் பொருளாதாரம் 6.4 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இது முந்தையவற்றுடன் ஒப்பிடும்போது, ஒரு சிறிய சரிவாகவே கொள்ளப்படுகிறது.
மற்ற முக்கிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில், சீனா 4.6 சதவிகிதமும், அமெரிக்கா 1.6 சதவிகிதமும், ஐரோப்பிய ஒன்றியம் ஒரு சதவிகிதமும், ஜப்பான் வெறும் 0.7 சதவிகிதம் மட்டுமே வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஜெர்மனி 0.1 சதவிகித அளவில் எதிர்மறையான வளர்ச்சியை அனுபவிக்கக்கூடும் என்றும் கூறுகிறது.