செய்திகள் :

Kohli: விராட் கோலியின் 10 ஆம் வகுப்பு மார்க் ஷீட் இணையத்தில் வைரல்! - எவ்வளவு மதிப்பெண் தெரியுமா?

post image

விராட் கோலியின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இணையதில் வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிபிஎஸ்இ வாரியம், பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kohli
Kohli

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜித்தின் யாதவ் இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 2023 ஆகஸ்ட் மாதம் பதிவிட்டது, தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில் கோலியின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட்டைப் போலவே படிப்பிலும் விராட் கோலி சிறந்தவராக இருந்துள்ளார்.

விராட் கோலியின் சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் சமூக அறிவியல், கணிதம், அறிவியல் மற்றும் ஐடி போன்றவற்றின் மதிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவர் ஆங்கிலத்தில் A1 கிரேடு மற்றும் சமூக அறிவியலில் A2 கிரேடு, இந்தியில் B1 பெற்றுள்ளார்.

அறிவியல் மற்றும் அறிமுக தகவல் தொழில்நுட்பத்தில், C1 மற்றும் C2 பெற்றுள்ளார். விராட் கோலியின் அதிகபட்ச மதிப்பெண்கள் ஆங்கில மற்றும் சமூக அறிவியலில் வந்துள்ளன.

இந்த மதிப்பெண் சான்றிதழின் கீழ் விராட் கோலி ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் ஜாம்பவானாக இருந்த விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள இவர் இனி ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளேன் என்று தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இறந்த தாயின் வெள்ளி கொலுசைக் கேட்டு, தகனத்தை தடுத்து நிறுத்திய மகன்... ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தானில் ஒரு மகன் வெள்ளி வளையலுக்காக தனது தாயாரின் சிதையில் ஏறி படுத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்தவர் புரி தேவி. இவருக்கு 7 மகன்கள் இருக்கின்றனர்.... மேலும் பார்க்க

Trump Tower: `ஒரே நாளில் விற்றுத்தீர்ந்தது' - டெல்லி மக்களை கவரும் ரூ.3,250 கோடி ட்ரம்ப் டவர்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மகன் ஜூனியர் ட்ரம்ப் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர் ட்ரம்ப் பெயரில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறார். இதற்காக உலகம் முழுவதும் உள... மேலும் பார்க்க

`ஒரு நாளைக்கு மூன்று முறை இதனை சாப்பிடுவேன்..'- தேநீர் பைகளை உட்கொள்ளும் இளம்பெண்!

சைப்ரஸின் லிமாசோலைச் சேர்ந்த பெண் ஒருவர் விசித்திரமான பழக்கங்களால் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளார். தேநீர் பிரியர்கள் தேநீர் மீதான தங்களின் ஈர்ப்பை எப்படி எல்லாம் வெளிப்படுத்துவார்கள், ஒரு நாளைக்கு ... மேலும் பார்க்க

ஆக்ஸியம் மிஷன்: இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் தள்ளிவைப்பு - என்ன காரணம்?

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவுடன்... மேலும் பார்க்க

நீலகிரி: சோழர் வரலாற்றை பிரதிபலிக்கும் மலர் அலங்காரம்! - 127வது மலர் கண்காட்சி க்ளிக்ஸ்

ஊட்டி மலர் கண்காட்சிஊட்டி மலர் கண்காட்சிஊட்டி மலர் கண்காட்சிஊட்டி மலர் கண்காட்சி மேலும் பார்க்க