ஜப்பானை பின்னுக்கு தள்ளியது இந்தியா!
இந்தியாதான் சிறந்த நிதி மேலாளராகத் திகழ்வதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகளாவிய வர்த்தகத்தின் நிச்சயமற்ற தன்மைகளுக்கிடையே, இந்தியாவைத்தான் ஒரு நிலையான மற்றும் நம்பிக்கைக்குரிய சந்தையாக முதலீட்டாளர்கள் கூறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், ஆசியாவிலேயே நிதி மேலாண்மையில் (Fund Managers) இந்தியாதான் அதிகளவில் தேர்வு செய்யப்படுவதாகவும் ஆய்வு கூறுகிறது. சிறந்த நிதி மேலாளராகக் காணும்போது, ஜப்பான் நாட்டைவிடவும் இந்தியா விஞ்சிவிட்டதாக போஃபா செக்யூரிட்டீஸ் (BofA Securities) ஆய்வு கூறுகிறது.
மேலும், இந்தியாவுக்கு 42 சதவிகிதம் ஆதரவு கிடைக்கப் பெற்றது. ஜப்பானுக்கு 39 சதவிகிதத்தினரும், சீனா வெறும் 6 சதவிகிதம் மட்டுமே பெற்றது. சுமார் 234 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளை நிர்வகிக்கும் நிதி மேலாளர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
வரி மற்றும் வர்த்தகப் பதற்றக் காலங்களிலும் ஏற்படும் உலகளாவிய விநியோகச் சங்கிலியின் மறுசீரமைப்புகளிலிருந்து இந்தியா பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால்தான், இந்தியா சிறந்த தேர்வாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
ஏப்ரல் 2 ஆம் தேதிமுதல், மற்ற ஆசிய நாடுகளைவிடவும் இந்திய பங்குச்சந்தை சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளது. பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றத்தின்போது, தற்காலிக வீழ்ச்சியைக் கண்டாலும், திடமான செயல்திறனைக் கொண்டுள்ளது.
சிறந்த பணப்புழக்கம், வரி, கிராமப்புறங்களின் தேவை ஆகியவற்றின் மூலம் இந்தாண்டு இறுதிக்குள், இந்திய நிறுவனங்களின் லாபத்தில் மேலும் 7.6 சதவிகிதம் வளர்ச்சியடையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.