ஒடிசாவில் 2 மாவோயிஸ்ட் முகாம்கள் தகர்ப்பு! வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல...
ஜப்பானில் வெளியாகும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்!
நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஜப்பானில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
வெளியான நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் கூடுதல் திரைகளில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை புக் மை ஷோ (book my show) ஆன்லைன் முன்பதிவு மூலமாக மட்டுமே 10 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படம் உலகளவில் ரூ. 50 கோடி வசூலைக் கடத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, இந்தப் படம் வெளிநாடுகளில் ரூ.10 கோடி வசூலித்துள்ளதாக வெளியீட்டு நிறுவனம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட்ஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜப்பானில் வரும் மே.24ஆம் தேதி வெளியாகுமென படக்குழு கூறியுள்ளது.
New destination unlocked: JAPAN! ✨ #TouristFamily continues its worldwide adventure, reaching audiences further than ever. Tickets open this weekend — don’t miss the TAMIL FILM OF THE YEAR!
— Ahimsa Entertainment (@ahimsafilms) May 15, 2025
Worldwide release (excl. India) by @vithurs_ ♥️@MillionOffl@Yuvrajganesan… pic.twitter.com/XYw1hWBQvB