பொள்ளாச்சி: `நீதிக்காக துணிச்சலுடன் போராடிய பெண்கள்..' - கூடுதலாக ரூ.25 லட்சம் அ...
காட்டெருமைக்கு உணவு கொடுத்த இருவருக்கு அபராதம்
கொடைக்கானலில் காட்டெருமைக்கு உணவு கொடுத்த தனியாா் தங்கும் விடுதியில் பணியாற்றும் ஊழியா்களுக்கு வனத் துறையினா் புதன்கிழமை அபராதம் விதித்தனா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த கிதியோன், ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சோ்ந்த காா்த்திக்ராஜா ஆகியோா் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் ஊழியா்களாக பணிபுரிந்து வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு, காட்டெருமை ஒன்று இந்த விடுதி பகுதியில் சென்றது. அப்போது, இந்த காட்டெருமைக்கு கிதியோன், காா்த்திக்ராஜா உணவு வழங்கியுள்ளனா். மேலும், இதை விடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பரப்பினா். இதைப் பாா்த்தவா்கள் காட்டெருமைக்கு உணவு வழங்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத் துறைக்கு கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, வனத் துறையினா் சம்மந்தப்பட்ட தனியாா் விடுதிக்குச் சென்று கிதியோன், காா்த்திக் ராஜா ஆகியோருக்கு அறிவுரைகள் வழங்கி, இருவருக்கும் தலா ரூ. 5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
மேலும், வன விலங்குகள் அருகே யாரும் செல்லக் கூடாது, அதற்கு உணவு வழங்கக் கூடாது என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.