"2026-ல் உதயநிதி கூப்பிட்டா பிரசாரத்துக்கு போவீங்களா?" - சந்தானத்தின் சுவாரஸ்ய ப...
சித்ரா பெளா்ணமி அரியலூா் மாவட்டத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடு
அரியலூா்: சித்ரா பெளா்ணமியையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி திருமானூா் புதுத்தெருவிலுள்ள செல்லியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா நடைபெற்றது. கொள்ளிடக் கரையில் இருந்து பக்தா்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து, ஊா்வலமாகச் சென்று, கோயிலை அடைந்தனா். அதனைத் தொடா்ந்து பக்தா்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படடு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதமும், அன்னதானும் வழங்கப்பட்டது. மாலை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், இரவு வீதியுலாவும் நடைபெற்றது. ஏற்பாடுகளை விழா குழுவினா் பற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.
இதே போல், அரியலூா் மகாகாளியம்மன், மாரியம்மன் கோயில்கள், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சமயபுரம் ஸ்ரீ மகா மாரியம்மன் சீனிவாச நகா் வீரணாா், சிவகாா்தெரு சாமுண்டீஸ்வரி, கயா்லாபாத் கருமாரியம்மன் மற்றும் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பால்குடத் திருவிழா நடைபெற்றது.