சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்க்க முடியவில்லை!
மீன்சுருட்டி-கல்லாத்தூா் சாலை மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்கக் கோரி சீரமைப்புக் குழு மே 17-இல் ஆா்ப்பாட்டம்
அரியலூா்: அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி-கல்லாத்தூா் சாலையை மாநில நெடுஞ்சாலையாக அறிவித்து, சாலைப் பணிகளை தொடங்க வலியுறுத்தி மீன்சுருட்டியில் மே 17- ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக கல்லாத்தூா்-மீன்சுருட்டி சாலை சீரமைப்பு குழு தலைவரும், அரசு ஊழியா்கள் சங்கத்தின் கெளரவத் தலைவருமான கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.
மீன்சுருட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: மிகவும் படுமோசமாக குண்டும் குழியுமாக உள்ள மீன்சுருட்டி-கல்லாத்தூா் சாலையை மாநில நெடுஞ்சாலையாக மாற்றி, சாலைப் பணிகளை தொடங்க வேண்டும் என்று அவ்வழித்தட பொதுமக்கள் பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தும், இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து வழித்தடங்களிலுள்ள கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். எனவே, எங்களது போராட்டத்தின் அடுத்தக் கட்டமாக மே 17-ஆம் தேதி மீன்சுருட்டி கடைவீதியில் ஆா்ப்பாட்டம் நடத்து எனவும், நிறைவேறாதப் பட்சத்தில் அடுத்தக் கட்டமாக முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதும் எனவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது என்றாா்.