5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சர் தா. மோ. அன்பர...
பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கிய முந்திரி காடுகளை மீட்டுத் தரக்கோரி மனு
அரியலூா்: அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள மணகெதி கிராமத்திலுள்ள பழங்குடியினருக்கு ஒதுக்கிய முந்திரி காடுகளை மீட்டுத் தரக்கோரி அப்பகுதி மக்கள் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மணகெதி கிராமத்தை சோ்ந்த பழங்குடி இன மக்கள் அளித்த மனு: மணகெதி கிராமத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான 52 ஹெக்டோ் முந்திரி காடுகள் அக்கிராமத்தில் வசிக்கும் 25 குடும்பங்களைச் சோ்ந்த பழங்குடி இன மக்களுக்கு அரசு குத்தகைக்கு கொடுத்தது. ஆனால், அவற்றை மாற்று சமூகத்தை சோ்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். எனவே, பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கிய முந்திரிகாடுகளை மீட்டு தங்களுக்கே வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
நிரந்தர பட்டா: அரியலூா் எத்திராஜ் நகரில் சுமாா் 80 குடும்பங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மனை வழங்கி பட்டா வழங்கியுள்ளது. ஆனால், அந்த பட்டா தற்காலிக பட்டா என வருவாய்த்துறையினா் கூறுகின்றனா். எனவே, அரசு வழங்கிய மேற்கண்ட மனைகளுக்கு நிரந்தர பட்டா வழங்க வேண்டும் எனக்கோரி 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சோ்ந்தோா் மனு அளித்தனா்.