ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆக குறைவு!
தமிழ்நாட்டின் டாப் 5 தொடர்கள் எவை?
தமிழ்நாட்டில் அதிக மக்களால் விரும்பிப் பார்க்கப்படும் தொடர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வார டிஆர்பி புள்ளிகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
சின்ன திரை தொடர்கள் அதிக மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டு வருகின்றன. பல முன்னணி தொலைக்காட்சிகளில் பெரும்பாலான நேரங்கள் தொடர்களே ஒளிபரப்பாகி வருகின்றன.
இல்லத்தரசிகளை மட்டுமின்றி தற்போது இளம் தலைமுறையினரைக் கவரும் வகையிலும் தொடர்கள் எடுக்கப்பட்டு வருவதால், சின்ன திரை தொடர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.
இந்த வாரத்தில் அதிக டிஆர்பி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் 5 இடங்களைப் பெற்றுள்ள தொடர்கள் குறித்து காணலாம்.
எதிர்நீச்சல் - 2
5வது இடத்தில் எதிர்நீச்சல் - 2 தொடர் உள்ளது. இந்தத் தொடர் பெண்களின் முன்னேற்றத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுவரும் தொடர்களில் முக்கியமானது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகிவருகிறது.
மூன்று முடிச்சு
4வது இடத்தில் மூன்று முடிச்சு தொடர் உள்ளது. ஈரமான ரோஜாவே புகழ் ஸ்வாதி - நியாஸ் கான் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி பிரீத்தி சஞ்சீவ், பிரபாகரன் சந்திரன், கிருத்திகா, தர்ஷனா ஸ்ரீபால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பதால் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சிங்கப் பெண்ணே
3வது இடத்தில் சிங்கப் பெண்ணே தொடர் உள்ளது. குடும்ப வறுமை காரணமாக கிராமத்திலிருந்து நகரத்துக்குச் செல்லும் பெண், சந்திக்கும் சவால்களே இந்தத் தொடரின் கதையம்சம். இதில் மணீஷா மகேஷின் நடிப்பு பலரைக் கவர்ந்துள்ளது. அறிமுகம் இல்லாத பலர் இத்தொடரில் முதன்மை பாத்திரங்களில் நடித்தாலும், கதையின் அம்சம் மற்றும் நடிப்பு காரணமாக இந்தத் தொடருக்கு ரசிகர்கள் அதிகம்.
கயல்
2வது இடத்தில் கயல் தொடர் உள்ளது. சைத்ரா ரெட்டி - சஞ்சீவ் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். ரசிகர்களைக் கவரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாலும் அதனை மிகுந்த சுவாரசியத்துடன் வழங்குவதால் இந்தத் தொடரின் மீதான மக்களின் எதிர்பார்ப்பு சற்றும் குறையவில்லை.
சிறகடிக்க ஆசை
முதலிடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் உள்ளது. டிஆர்பி பட்டியலில் முதன்மை இடங்களைப் பகிர்ந்துள்ள அனைத்துமே சன் தொலைக்காட்சியின் தொடராக இருக்க, விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
எளிமையான நடுத்தர குடும்பத்து கதாபாத்திரங்களைக் கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பலதரப்பட்ட மக்களால் இத்தொடரை தொடர்புபடுத்துக்கொள்ள முடிகிறது.