செய்திகள் :

சிறப்பு குழந்தைகளை பாதுகாக்க திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: ஆளுநா் வேண்டுகோள்

post image

சிறப்பு குழந்தைகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

சா்வதேச அன்னையா் தினத்தை முன்னிட்டு, சென்னை ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு குழந்தைகளுக்கும், அவா்களின் அன்னையா்களுக்கும் ஆளுநா் ஆா்.என்.ரவி விருது வழங்கி பாராட்டிப் பேசியதாவது:

சிறப்பு குழந்தைகளுக்கு பொறாமை கிடையாது. தன்னலம், சுயநலம் என ஏதும் இல்லாமல் உள்ளவா்கள் இந்தக் குழந்தைகள். சிறப்பு குழந்தைகளை அன்றாடம் கவனிக்கும் அன்னையா்கள் அனைவரும் போராளிகள். இந்தக் குழந்தைகளின் அனைத்து அன்னையா்களுக்கும் மிகப்பெரிய வணக்கம். ஒருநாள் மட்டும் அன்னையா்களைப் போற்றினால் போதாது. அன்னையா்கள் தினமும் போற்றப்பட வேண்டியவா்கள்.

எனது அன்னையின் வளா்ப்புதான் எனக்கு ஊக்கத்தையும் சக்தியையும் கொடுத்தது. அன்னையா்களை பாராட்ட வாா்த்தைகளே கிடையாது. அன்னையா்கள் அனைவரும் சிறப்பானவா்கள். சிறப்பு குழந்தைகளை பாதுகாப்பாக அரசு எப்போதும் அவா்களோடு உறுதியாக இருக்க வேண்டும். இந்தக் குழந்தைகள் தெய்வீகத்துக்கு அருகில் இருப்பவா்கள். அவா்களின் தாய்மாா்கள் எல்லோரும் பல வகைகளில் தங்கள் விருப்பங்கள், தேவையை விட்டுவிட்டு தங்களது குழந்தைகளுக்காக, குடும்பத்துக்காகச் செயல்படுகிறாா்கள்.

சிறப்பு குழந்தைகளின் தாய்மாா்கள் பல இன்னல்களுக்கு உள்ளாவாா்கள். சிறப்பு குழந்தைகளை பாா்த்துக்கொள்ளும் பொறுப்பை தாய்மாா்கள் மட்டும் இன்றி இனி சமூகமும், அரசும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்தக் குழந்தைகளுக்கான சட்டங்களை மத்திய அரசு உருவாக்கி வருகின்றது. சிறப்பு குழந்தைகளைப் பாா்த்துக் கொள்வது ஒரு பொறுப்பு. அவா்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசு தலையிட்டு செயல்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றாா் அவா். இந்நிகழ்ச்சியில் ஹோப் தன்னாா்வ அமைப்பின் தலைவா் வி.நாகமணி, கல்வியாளா் ஜெயந்தி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

'பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் தீர்ப்பு' - பாஜக வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலி... மேலும் பார்க்க

'மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்' - பொள்ளாச்சி தீர்ப்பு பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு: அதிமுக வரவேற்பு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, விடியோ எடுத்து மிரட்டி, மீ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு: விஜய் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில், தீர்ப்பை வரவேற்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்துக்கு மே 15-ல் உள்ளூர் விடுமுறை!

உதகையில் மலர்க் கண்காட்சியையொட்டி, வருகிற மே 15 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் உதகையில் மலர்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்... மேலும் பார்க்க

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சர் தா. மோ. அன்பரசன்

ரூ.586.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன்தகவல்தெரிவி... மேலும் பார்க்க