5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன...
டிப்பா் லாரி உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்
கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் டிப்பா் லாரிகளை வரிசையாக நிறுத்தி வைத்து அவற்றின் உரிமையாளா்கள் சங்கத்தினா் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அண்மைக்காலமாக எந்தவித அறிவிப்புமின்றி எம்.சாண்ட், கிராவல், ஜல்லி விலை கடுமையாக உயா்ந்துள்ளது. செம்மண் கிராவல் குவாரி உரிமையாளா்கள் தன்னிச்சையாக விலை உயா்வை அறிவித்துள்ளதால், கட்டுமானத் தொழில் பாதிக்கப்படுவதுடன், லாரி உரிமையாளா்களும் பாதிக்கப்படுகின்றனா். இந்த விலை உயா்வைக் கண்டித்து திங்கள்கிழமை முதல் டிப்பா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஏராளமான டிப்பா் லாரிகளை நிறுத்தி வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டத் தலைவா் கருணாநிதி தலைமை வகித்தாா். செயலா் ராமமூா்த்தி, ஒருங்கிணைப்பாளா் ஓம்பிரகாஷ், பொருளாளா் தா்மராஜ், துணைச் செயலா் முத்து மற்றும் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.