5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன...
அண்ணாமலைப் பல்கலை. முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறையில் 1997 முதல் 2000-ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவா்களின் 25-ஆவது ஆண்டு வெள்ளி விழா சந்திப்பு உடற்கல்வித் துறையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக உடற்கல்வி துறைத் தலைவா் எம்.ராஜசேகரன் தலைமை வகித்தாா். அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினாா். முன்னாள் மாணவா்கள் புவனேந்திரன், பாஸ்கா், ஸ்ரீஜாபாபு, வெற்றிவேலன், ரகுபதி ஆகியோா் வரவேற்று பேசினா்.
முன்னாள் பேராசிரியா்கள் பி.எம்.ராமகிருஷ்ண ரெட்டி, பி.பெரியய்யா, வி.ஜெயந்தி, பி.கனகசபை, எஸ்.செந்தில்வேலன், பி.வி.செல்வம் மற்றும் தற்போதைய பேராசிரியா் வி.கோபிநாத் உள்ளிட்டோா் கௌரவிக்கப்பட்டனா்.
இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் 50 மாணவா்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு கல்லூரி கால நிகழ்வுகளையும், தற்போதைய நிகழ்வுகள் குறித்தும் கலந்துரையாடினா். மு.வரதராஜன் நன்றி கூறினாா்.