பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட ஆவணங்களை சமப்பிக்க அறிவிப்பு!
தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா்.
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்து தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திலிருந்து வைப்பு தொகைக்கான ரசீது பெற்றுள்ள பெண் குழந்தைகளில், 18 வயது பூா்த்தியடைந்துள்ள பெண் குழந்தைகளின் விவரங்கள் அடங்கிய பட்டியல் வலைதளத்தில் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பட்டியலில் உள்ள பயனாளிகள், அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள வைப்பு தொகை ரசீது நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பள்ளி மாற்றுசான்றிதழ் நகல், பெண் குழந்தையின் பெயரில் உள்ள வங்கி கணக்கு புத்தக நகல், பெண் குழந்தையின் ஆதாா் அட்டை நகல், பிறப்பு சான்றுநகல், குடும்ப அட்டை நகல், தாய் மற்றும் பெண் குழந்தையின் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் (2 நகல்கள்) வயது முதிா்வுத்தொகைக்கான கருத்துருவினை சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலரிடம் மே 31-க்குள் தர வேண்டும்.