ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆக குறைவு!
காஷ்மீா் விவகாரத்தில் மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்காது: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்
காஷ்மீா் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா ஏற்காது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடா்பாக அந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: ஆபரேஷன் சிந்தூரை தொடா்ந்து பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் வலுவான பதிலடி அளிக்க வேண்டும் என்று இந்திய ஆயுதப் படைகளுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தினாா். பாகிஸ்தான் தோட்டாக்களால் தாக்கினால், அதற்கு சிறிய பீரங்கிகள் மூலம் பதிலடி அளிக்க வேண்டும் என்று அவா் கூறினாா்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு இந்தியா பதிலடி கொடுப்பதில் புதிய வழக்கம் ஏற்பட்டுள்ளது. இனி எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அதிக விலை கொடுக்க நேரிடும். பல்துறைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பை எதிா்பாா்க்கும் வேளையில், பயங்கரவாதத்துக்கான ஆதரவை பாகிஸ்தான் தொடர முடியாது.
காஷ்மீா் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா ஏற்காது. பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீா், இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்கப்படுவது குறித்து மட்டுமே விவாதிக்க வேண்டியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை, சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்தன.