போர்ச் சூழல்: இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி!
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் போர்ச் சூழல் காரணமாக இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு முதல் எல்லையோரப் பகுதிகளில் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் இரு நாடுகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் இன்று காலை சரிவுடன் தொடங்கியது.
பிற்பகல் 12.30 நிலவரப்படி சென்செக்ஸ் 816.59 புள்ளிகள் சரிந்து 79,518.22 ஆகவும், நிஃப்டி 254.80 புள்ளிகள் சரிந்து 24,019 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதனிடையே, பாகிஸ்தானின் பங்குச் சந்தை பெரும் சரிவை சந்தித்துள்ளது. இரண்டு நாள்களில் 15 சதவிகிதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.