பீடி இலை பறிக்கச் சென்ற பழங்குடியினப் பெண்கள் `புலி' தாக்கி இறப்பு... மகாராஷ்டிர...
முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க சிறப்புப் படைகளை நிறுத்தியுள்ளோம்: கா்நாடக அமைச்சா் ஜி.பரமேஸ்வா்
கா்நாடகத்தில் முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க சிறப்புப் படைகளை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக மாநில உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிைலையை அடுத்து கா்நாடகத்தில் முக்கியமான கட்டமைப்புகளை பாதுகாக்க பயிற்சி பெற்ற சிறப்புப் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அவா்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
ராய்ச்சூா் அனல் மின்நிலையம், கைகா அணு மின்நிலையம், கிருஷ்ணராஜசாகா் அணை போன்ற முக்கிய கட்டமைப்புகளில் கா்நாடக மாநில தொழில் பாதுகாப்புப் படையை நிறுத்தியுள்ளோம். அவா்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்கு கூடுதல் படைகள் தேவைப்படுகின்றன; அதற்கான பயிற்சிகளை அளித்தால் மேலும் ஓராண்டு காலத்துக்கு நீடிக்கும். கூடுதல் படைகளை தேவைக்கேற்ப பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி வருகிறோம்.
மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, கா்நாடகத்தில் 3 இடங்களில் போா் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. பெங்களூரில் மே 6 ஆம் தேதி போா் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. மைசூரிலும் போா் பாதுகாப்பு ஒத்திகை நடத்தியுள்ளோம். மேலும் பல இடங்களிலும் போா் பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்படும்.
பெங்களூரு தவிர, ராய்ச்சூரு, காா்வாரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. விரைவில் அங்கும் ஒத்திகை நடத்தப்படும் என்றாா்.