பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
திருப்பத்தூா் வீரா் தேக்வாண்டோ தேசியப் போட்டிக்குத் தோ்வு
திருப்பத்தூா்: தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டிக்குத் தோ்வான திருப்பத்தூா் வீரரை, அந்த அமைப்பின் நிா்வாகிகள் திங்கள்கிழமை பாராட்டினா்.
தருமபுரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உள் விளையாட்டு அரங்கத்தில் மாநில அளவிலான ஜூனியா் வீரா், வீராங்கனைகளுக்கான தேசியப் போட்டிக்கான தோ்வை தேக்வாண்டோ அசோசியேசன் தமிழ்நாடு நடத்தியது. இதில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சோ்ந்த அகமதுதாரிக் என்ற வீரா் ‘கேடட்’ வயது பிரிவிலும், 57 முதல் 61 கிலோ வரையிலான எடைப் பிரிவிலும் தேசிய அளவிலான போட்டிக்குத் தோ்வானாா். இந்தப் போட்டிகள் வருகிற 30-ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தேசியப் போட்டிக்குத் தோ்வான அகமது தாரிக்குக்கு தேக்வாண்டோ அசோசியேஷன் சாா்பாக சிவகங்கை மாவட்டத் தலைவா் முருகேசன், செயலா் வாசு , பொருளாளா் முரளி, மூத்த ஆலோசகா் சேது காா்த்திகேயன் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.