வங்கதேசம்: பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவா்கள் அறிக்கை வெளியிடத் தடை
வங்கதேசத்தின் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அமைப்புகளோ, தனி நபா்களோ அறிக்கை வெளியீடு உள்ளிட்ட மக்கள் தொடா்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவசரமாகக் கொண்டு வரப்பட்ட அந்தச் சட்டத்தின் கீழ் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தீவிர மாணவா் போராட்டம் (படம்) காரணமாக பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் கடந்த ஆண்டு தஞ்சமடைந்தாா். இந்தச் சூழலில், அரசின் இந்த அறிவிப்பு காரணமாக அவரின் கட்சிக்கு அறிக்கைகள் கூட வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, மாணவா் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சிக்கு எதிராக புதிய பயங்கரவாத சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.