தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு!
Aamir Khan: `25 ஆண்டுகள் நட்பு; லிவ் இன் உறவு, காதல் வாழ்க்கை...' -புதிய துணை குறித்து ஆமிர் கான்
பாலிவுட் நடிகர் ஆமிர் கான் சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த பெண்ணை காதலிப்பதாக செய்தி வெளியானது. அதனை ஆமிர் கானும் உறுதிபடுத்தினார். ஆமிர் கான் தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நேற்று இரவே தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடினார். அதோடு நேற்று முன் தினம் இரவு தனது பாலிவுட் நண்பர்கள் ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோரை ஆமிர் கான் தனது வீட்டிற்கு அழைத்திருந்தார். அவர்கள் ஆமிர் கான் பிறந்தநாளை கொண்டாடினார்களா அல்லது ரம்ஜான் பார்ட்டி நடத்தினார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் இரண்டு பேரையும் ஆமிர் கான் தனது வீட்டிற்கு அழைத்ததற்கான காரணம் நேற்று மாலைதான் தெரிய வந்தது. தனது புதிய காதலி கெளரியை பாலிவுட் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யவே ஷாருக்கான் மற்றும் சல்மான் கானை தனது வீட்டிற்கு ஆமிர் கான் அழைத்திருந்தார்.

இதனை ஆமிர் கானே பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். ஆமிர் கான் தனது புதிய காதலியை நேற்று மாலை மீடியாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ''நானும், கெளரியும் 25 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக சந்தித்துக் கொண்டோம். இப்போது நாங்கள் லைஃப் பார்ட்னர்கள். எங்களது உறவில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம். ஒன்றரை ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கெளரியை எனது நண்பர்கள் ஷாருக்கான், சல்மான் கானுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். கெளரி இப்போது தயாரிப்பு பிரிவில் இருக்கிறார். அவரிடம் நான் தினமும் பாடிக்காட்டுகிறேன் என்று கூறிய ஆமீர் கான் தனது லைஃப் பார்ட்னருக்காக 'கபி கபி மேரா தில் மெயின்' என்ற பாடலை பாடினார்.
அவர் மேலும் கூறுகையில், ''எனது 60 வயதில் திருமணம் மகிழ்ச்சியை கொடுக்குமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எனது குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எனது முன்னாள் மனைவிகளுடன் சிறந்த உறவுகளைப் பெற்றிருப்பது எனக்கு மிகவும் அதிர்ஷ்டம். கெளரி ஒரு சில படங்களை மட்டுமே இது வரை பார்த்திருக்கிறார். எங்களது உறவால் எங்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்'' என்றார்.
மேலும், `கெளரி 6 வயது மகனுக்கு தாயாவார். அதோடு கெளரி பாதி தமிழ் ஆவார். பாதி ஐரிஸ் இனத்தைச் சேர்ந்தவர். கெளரியின் தாத்தா சுதந்திரப்போராட்ட வீரர்' என்று ஆமிர் கான் தெரிவித்தார்.

திருப்தியளிக்காத இரண்டு காதல் திருமணங்கள்
ஆமிர் கான் முதன் முதலில் ரீனா தத்தா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1986-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் 16 ஆண்டுகள் கழித்து 2002-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். இருவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் இப்போதும் ஆமீர் கானின் அரவணைப்பில் அவருடன் சேர்ந்துதான் வசிக்கின்றனர். ஒரே கட்டிடத்தில் வேறு வேறு வீட்டில் வசிக்கின்றனர். ரீனா தத்தாவுடன் ஆமீர் கான் இன்னும் நல்ல நட்பில்தான் இருக்கிறார்.
2005-ம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரை 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். இத்தம்பதிக்கு ஆஷாத் என்ற மகன் இருக்கிறார். கிரண் ராவுடனும் ஆமீர் கான் நல்ல உறவை பராமரித்து வருகிறார். இரண்டு காதல் திருமணம் திருப்தியளிக்காத நிலையில் இப்போது மூன்றாவதாக லிவ் இன் உறவில் புதிய காதலியுடன் வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார் ஆமிர் கான்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
