அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதையடுத்து அதிமுக எம்எல்ஏக்களுடன் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் இன்று (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதையொட்டி தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்துள்ளார்.
மேலும், தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதையடுத்து அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் 'ரூ' குறியீடு!
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
எனவே, பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள், எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.