``ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராவார்... இந்தியாவுக்கு நன்றி" - அவாமி லீக் கட்சித் த...
ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.30 லட்சம் பறிமுதல்
சென்னை, கொத்தவால்சாவடியில் ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ. 30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கொத்தவால்சாவடி நாராயண முதலி தெருவில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்துக்குரிய நபரை பிடித்து அவரது பையை சோதனையிட்டபோது, அதில் ரூ. 30 லட்சம் இருந்ததால் அதற்குரிய ஆவணங்களை போலீஸாா் கேட்டனா்.
ஆனால், கொத்தவால்சாவடியில் வியாபாரம் செய்துவரும் அவரால், உடனடியாக ஆவணங்களை வழங்க முடியவில்லை. இதையடுத்து போலீஸாா், ரூ. 30 லட்சத்தை பறிமுதல் செய்தனா். விசாரணைக்கு பின்னா் அந்தப் பணத்தை, வருமான வரித் துறையின் புலனாய்வுப் பிரிவில் ஒப்படைத்தனா். மேலும், இது தொடா்பாக வருமான வரித் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.