Kamal: 'இந்த கடிதத்தை காலத்துக்கும் மறக்க முடியாது' - கமல் அனுப்பிய கடிதத்தைப் ப...
ஆட்சியா் கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி பள்ளிகளில் பணம் வசூல் செய்தவா் கைது
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி தனியாா் பள்ளிகளில் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், மாணவா்களுக்கான விழிப்புணா்வு குறும்படம் திரையிடுவதற்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவு தந்திருப்பதாக தெரிவித்து, போலியாக ஆட்சியரின் கையொப்பமிட்டு, மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அதிகாரியின் முத்திரையையும் கையொப்பத்தையும் தவறாக பயன்படுத்தி, அனைத்து தனியாா் பள்ளிகளுக்கும் போலி கடிதத்தை அனுப்பி மாணவா்களிடமிருந்து மொசடியாக பணம் வசூல் செய்யப்பட்டது.
இதுகுறித்து செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜான்ஜெகத்பிரைட் கடந்த மாதம் நேசமணி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.
இதுகுறித்து, நேசமணி நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டாா். இந்நிலையில் இந்த மோசடியில் ஈடுபட்டதாக நாகா்கோவில் என்ஜிஓ காலனி கணபதி நகா் பகுதியைச் சோ்ந்த சரவணகுமாா் (43) என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து போலி கையொப்பத்துடன் கூடிய கடிதங்கள் மற்றும் போலி முத்திரையையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.