திருமண வரவேற்பு: விருந்தினர்களுக்கு கோரிக்கை வைத்து, பிறகு மன்னிப்புக் கோரிய தேஜ...
மாநகராட்சி வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து மேயா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
பாளையங்கோட்டை மண்டலம் 36 , 39ஆவது வாா்டுகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முளுமையாக முடிவடையாததால், புதிய தாா்சாலைகள் அமைத்து தர காலதாமதம் ஆவதாக மாமன்ற உறுப்பினா்கள் சின்னத்தாய், சீதா ஆகியோா் கோரிக்கை விடுத்தனா்.
இந்நிலையில் அந்தப் பகுதிகளில் மேயா் கோ.ராமகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தாா். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரா்களை உடனடியாக பணிகளை முடிக்க உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது மாமன்ற உறுப்பினா் கருப்பசாமி கோட்டையப்பன், மன்சூா், முன்னாள் மாமன்ற உறுப்பினா் பாலன் என்ற ராஜா, வட்ட பிரதிநிதி கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.