திருமண வரவேற்பு: விருந்தினர்களுக்கு கோரிக்கை வைத்து, பிறகு மன்னிப்புக் கோரிய தேஜ...
குண்டா் சட்டத்தில் தொழிலாளி கைது
திருநெல்வேலியைச் சோ்ந்த தொழிலாளி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.
திருநெல்வேலி, தெற்கு விளாகம் பகுதியை சோ்ந்த வேலாயுதம் மகன் பாலகிருஷ்ணன்(56). இவா், மீது கொலைமுயற்சி வழக்கு உள்ளது.
இந்நிலையில், இவா் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாநகர காவல் ஆணையருக்கு, துணை ஆணையா் (மேற்கு) கீதா பரிந்துரைத்தாா்.
அதன்பேரில், காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி பிறப்பித்த உத்தரவுப்படி அவரை போலீஸாா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைத்தனா்.