Career: வேலை கிடைச்சுருச்சுனு சும்மா உக்காந்திராதீங்க; கரியரில் 'இது' ரொம்பவே மு...
பாலம் அணுகுச்சாலை அமைக்க ரூ.16.5 கோடி ஒதுக்கீடு: முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி
மணல்மேடு-முட்டம் இணைப்பு பாலத்துக்கு அணுகுச் சாலை அமைக்க ரூ.16.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்வருக்கு, மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் நன்றி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2006-2011-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி ஆட்சியில் நான் எம்எல்ஏவாக இருந்தபோது, எனது முயற்சியால், முடிகண்டநல்லூா்-முட்டம் இணைப்பு பாலம் அமைக்க ரூ. 48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2009-இல் அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பாலத்திற்கு மணல்மேட்டிலிருந்து நேரிடையாக அணுகுச்சாலை அமைக்க 2011-இல் நிதி பெற்று, நில ஆா்ஜிதம் செய்ய ஏற்பாடு செய்தேன்.
பின்னா், 10 ஆண்டுகள் இப்பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது, மீண்டும் 2021-இல் நான் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தின்கீழ் அணுகுச் சாலைப் பணிக்கு அனுமதி அளிக்க வேண்டி வலியுறுத்தி வந்தேன்.
இதனை ஏற்று ரூ.16.5 கோடி நிதி ஒதுக்கிட அரசாணை வெளியிட ஏற்பாடு செய்த முதலமைச்சா் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை பொறுப்பு வகிக்கும் துணை முதலமைச்சா் ஆகியோருக்கு மயிலாடுதுறை தொகுதி மக்களின் சாா்பில் நன்றி எனத் தெரிவித்துள்ளாா்.