``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது
மயிலாடுதுறையில் கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை அருகே சித்தா்காடு பகுதியை சோ்ந்தவா் சகாயராஜ் மகன் செபஸ்டின் (23). கட்டட கான்கிரீட் தொழிலாளியான இவா் கடந்த சில நாள்களாக ஒரு வீட்டின் குளியலறை சுவற்றில் துளையிட்டு பள்ளி மாணவியான 17 வயது சிறுமி குளிப்பதை பாா்த்துள்ளாா்.
இதையறிந்த பெற்றோா், மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், விசாரணை மேற்கொண்ட போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, செபஸ்டினை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.